Asaikapaduvathillai

அசைக்கப்படுவதில்லை நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை
கர்த்தரை என் முன்பாக வைத்துவிட்டேன்
நான் அசைக்கப்படுவதில்லை – 2
ஜீவனுள்ள தேவனைப் பற்றிக்கொண்டேன்
கறைதிரை ஒன்றும் நெருங்காது – 2
இரட்சகரை என்னோடு அணைத்துக்கொண்டேன்
சாத்தானின் சேனை என்னை அணுகாது – 2
தேவதூதர் சேனைகள் என்னோடு
செல்லுகின்ற இடமெல்லாம் சூழ்ந்திடுவார் – 2
பாதங்கள் கல்லின்மேலே இடறாமல்
கரங்களில் ஏந்தி என்னை நடத்திடுவார் – 2
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் – 2
வாக்குத்தத்த வசனங்கள் பெற்றுக்கொண்டேன்
நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் – 2