Arumarunthe owshathamae song lyrics

அருமருந்தே ஒளஷதமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அருமருந்தே ஒளஷதமே
பரிகாரியே ஜீவன் தந்தவரே -2
இயேசுவே என் இயேசுவே
இயேசுவே பரிகாரி நீர் -2
நீர் அடைந்த காயத்தால் சுகமாகிறோம்
உம்முடைய தழும்புகளால் குணமாகிறோம் -2
உம் திரு இரத்தத்தால் உமது வார்த்தையால் உமது நாமத்தால் உயிர்வாழ்கிறோம் -2
இயேசுவே என் இயேசுவே
இயேசுவே பரிகாரி நீர் -2
2.ஊற்றுண்ட பரிமள தைலம் நீரே
கீலேயாத்தின் பிசின்தைலம் வைத்தியர் நீரே -2
அக்கிரமங்கள் மன்னித்ததால் பாவங்கள் போக்கியதால் உம் திரு வார்த்தையால் பிழைத்துக்கொண்டோம் -2 – இயேசுவே
3.நீர் கொடுத்த வெளிச்சத்தால் உம்மை கண்டோம்
நீர் எம்மை ஏற்றுக்கொண்டதால் பிழைத்துக்கொண்டோம் -2
உமது அன்பினால் உமது கிருபையால் உமது இரக்கத்தால்
மீட்கப்பட்டோம் -2 – இயேசுவே