Arumai Ratchaka Koodi Vanthom

அருமை ரட்சகா கூடி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பல்லவி
அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உம
தன்பின் விருந்தருந்த வந்தோம் .
அனுபல்லவி
அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க .- அருமை
சரணங்கள்
1.ஆராயும் எமதுள்ளங்களை ,-பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூறும் – அருமை
2.ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்;
கோவே! மா பய பக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ .- அருமை
3.உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உமது
ஒலி முக தரிசன முற்றோம் ;
சமாதானம் ,அன்பு, சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும் .- அருமை
4.கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்யம் ;
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே ,வந்தனம் !- அருமை
5.எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் ;-கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர் ;
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம் ,
புண்ய நாதரே !-அருமை
6.பந்திக் கெசமான் நீர் யேசுவே!- எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே;
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய .-அருமை