arulakum annaikku nikar yar illai – un

அருளாகும் அன்னைக்கு நிகர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

அருளாகும் அன்னைக்கு நிகர் யார் இல்லை – உன்
அருளாலே உலகெங்கும் அழியாத புகழ்பாடும்
நிலையான இறையன்பை வரமாக்கும் தாயே
நினைவோடும் செயலோடும் நடமாடும் தாயே
நீதானம்மா என் நல்வாழ்வின் தாயே
நீயின்றி வேறில்லையே என் தாயே
கரையுள்ளம் என்றாலும் கரை சேர்க்கும் தாயே
கனிவான அன்போடு உறவாடும் தாயே
உமை நம்பினோம் என் ஆதாரம் தாயே
ஒருபோதும் மறவாதிரும் என் தாயே