arul nirai mariye amma – Arul Nirai mariyae Amma

அருள் நிறை மரியே அம்மா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

அருள் நிறை மரியே அம்மா – Arul Nirai mariyae Amma
அருள் நிறை மரியே அம்மா அம்மா
ஆ… ஆ… ஆ…
அருள் நிறை மரியே அம்மா அம்மா
அவனியில் உயர்ந்தவள் நீயம்மா
சேயரெம்மை அணைக்கும் தாயம்மா
உன் சேவடி வந்தோம் இன்பமம்மா
அருள் நிறை மரியே நீ வாழ்க
பேறுடைப் பெண்ணே நீ வாழ்க
கருவில் திருவாய் இயேசுவைச் சுமந்தாய்
வாழ்க நீ வாழ்க
இறைச் சித்தம் ஏற்றதுன் பணிவுக்கு அழகு
உதவிட முனைவதுன் கனிவுக்கு அழகு
சிலுவையை தொடர்ந்ததுன் துணிவுக்கு அழகு
இறைவனின் தாயானாய் தரணிக்கு அழகு
துயரினை வென்றதுன் திறனுக்கு அழகு
ஆவியைப் பெற்றதுன் அருளுக்கு அழகு
சீடரை இணைத்ததுன் தலைமைக்கு அழகு
உலகின் உயிரானாய் வாழ்வுக்கு அழகு