arppana malaray vanthen

அர்ப்பண மலராய் வந்தேன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அர்ப்பண மலராய் வந்தேன்
அர்ச்சனை ஆக்கினேன் என்னை
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும்
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் – அந்த
ஜோதியில் நிறைவு கொள்வேன் ஆ
1. கோதுமை மணியாய் மடிந்து – என்னை
வெண்ணிற அப்பமாய் தந்தேன்
என்னுடல் உன்னுடலாகிடவே
உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே என்னை கனிவுடன் ஏற்பாயே ஆ
2. விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் – புவி
அதிபதி உன் திட்டம் மறந்தேன்
மதியில்லாதவன் ஆனாலும்
கதியிழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய் நான்
ஜதியுடன் பாட்டிசைப்பேன் ஆ
அர்ப்பண மலராய் வந்தேன் பாடல் வரிகள், Arpana Malaraai Vanthean Lyrics