ariyanaiyil amarnthirukkum – Ariyanaiyil Amarndhirukkum

அரியணையில் அமர்ந்திருக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அரியணையில் அமர்ந்திருக்கும் – Ariyanaiyil Amarndhirukkum
அரியணையில் அமர்ந்திருக்கும்
தொன்மை வாய்ந்தவரே
முடிவில்லா ராஜ்ஜியத்தை
என்றென்றும் உடையவரே
உம் ஆடைகள் வெண்பனி போல் உள்ளது
உம் தலைமுடி வெண்மையாய் இருக்கின்றது
உம் பாதங்கள் வெண்கலமாய் உள்ளது
உம் முகமோ சூரியன் போல் உள்ளது
பாத்திரரே பரிசுத்தரே
துதிகளிலே வசிப்பவரே
தலைமுறை தலைமுறையாய் நீர்
ஆளுகை செய்பவரே
அசைவில்லா ராஜ்ஜியத்தை நீர்
எனக்காக வைத்தவரே
பாத்திரரே பரிசுத்தரே
துதிகளிலே வசிப்பவரே