aravanaikkum iyesu anpay – Aravanaikkum Yesu Anbaai

அரவணைக்கும் இயேசு அன்பாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

அரவணைக்கும் இயேசு அன்பாய் – Aravanaikkum Yesu Anbaai
அரவணைக்கும் இயேசு அன்பாய் அழைக்கிறார்
ஆதரிக்கும் இயேசு அன்பாய் அழைக்கிறார்-2
தாங்கா துயரம் தாக்கும் நேரம்
தயங்காமல் வந்திடுவார் -2
இன்னல் நீக்கி இன்பம் நல்கி
இரக்கம் காட்டிடுவார் -2
வியாதி வருத்தம் வறுமை
வல்லவரால் நீங்குமே
அரவணைக்கும் அன்பர் இயேசு
ஆற்றியே தேற்றிடுவார்
தந்தை தாயும் கைவிட்டாலும்
தாங்கி அரவணைப்பார்
உள்ளங்கையில் வரைந்த தேவன்
உன்னை உயர்த்திடுவார்