arathanai aarathanai aarathanai thuthi

ஆராதனை ஆராதனை ஆராதனை துதி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை
பரிசுத்தரே உமக்காராதனை
பரலோக தேவனே ஆராதனை
1. நல்லவரே நன்மை செய்பவரே
நீதியின் ராஜாவே ஆராதனை
நித்தமும் நன்மையால் நிறைப்பவரே-என்
முழு பெலத்தால் உமக்கு ஆராதனை
2. தூயவரே துணை வருபவரே
தயாபர பிதாவே ஆராதனை
நித்தமும் நன்மையால் நிறைப்பவரே
என் முழுமனதால் உமக்கு ஆராதனை
3. வல்லவரே வாக்கு மாறாதவரே
கருணையின் சிகரமே ஆராதனை
அனுதினம் வழிகளில் காப்பவரே - என்
இருதயத்தால் உமக்கு ஆராதனை