appane neer enakku eppatiyum – Appanae Neer Enakku Eppadiyum

அப்பனே நீர் எனக்கு எப்படியும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பனே நீர் எனக்கு எப்படியும் – Appanae Neer Enakku Eppadiyum
பல்லவி
அப்பனே நீர் எனக்கு எப்படியும் இரங்கி
அருளிச் செய்ய வேணும் நல் வகையை.
அனுபல்லவி
தப்பிக் கெட்ட எனக்காய் ஒப்புடன் ரத்தம் சிந்திச்
செப்பமுடன் எனைமீட்டதன் மெய்ப்பரனே, கிறிஸ்தரசே,
சரணங்கள்
1.வஞ்ச வினைக்குட் பட்டேன்; நெஞ்சம் உருகிப் புண்ணாய்
வாடி உலைந்து, பவமதினாலே-தினம்
சஞ்சலப் பட்டுழன்று, நஞ்சுண்ட கெண்டையைப்போல்
தயங்கி மயங்கி மிகத் தியங்குவனோ?-ஏழை
தஞ்சம் எனக்கு நீர் என் கெஞ்சுதலுக்கு இரங்கிப்
பஞ்ச பவங்களைத் தீர்த்தருள்;
மிஞ்சும் கிருபை விழிபாரும்; மெய்-அப்
2. நாடிப் பவத்தில் விரைந் தோடி விழுந்துகெட்டு
நைந்து கரைந்து மனம் மெலிவேனோ?-மிக
வாடித் தவித்த என்னைத் தேடி ரட்சிக்க நீர்தாம்
வலிய வந் துதிரத்தைச் சொரிந்தீரே;-இப்போ
பாடிக் கெஞ்சும் எனக்குச் சூடிக் கிருபை அருள்;
நீடி தயையினைப் புரியும்;
கொண்டாடி உமக்கூழியம் செய்ய மெய்-அப்
3.முன்னாள் நீர் ஈந்ததெல்லாம் என்னாலே நான் அழித்து
முழுவதையும் இழந்துபோனேனே;-பாவி
தன்னாலே கெட்டவன் நான் பின் ஆரிடம் போவேன் நீர்
தாமே எனக்குப் பிணைப்பட்டீர், ஐயா-தேவ
மன்னா, மெய் மன்னா, ஓசன்னா! க்ருபை செய்யும்;
இந்நாள்முதல் நான் மகிழ்ந்தினி
எந்நாளும் உமக்கூழியம் செய்ய மெய்-அப்