appamithu appamithu – Appamidhu Appamidhu

அப்பமிது அப்பமிது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அப்பமிது அப்பமிது – Appamidhu Appamidhu
அப்பமிது அப்பமிது (திருவிருந்து)
பல்லவி
அப்பமிது அப்பமிது வெள்ளை நிற அப்பமிது -2
சமபந்தி விருந்திலே இயேசுவின் திருப்பந்தியிலே
அவரின் நினைவாய் நாம் உண்ணும்
சரணம் 1
இறுதி உணவில் தன்னையே தந்த இயேசு வருகின்றார்
தன்னைப் பகிர்ந்து உயிரைத் துறந்து வாழ்வு தருகின்றார்
அப்பத்தின் வடிவில் கடவுள் நம்மோடு வாழ்கின்றார் -2
சரணம் 2:
உயிராய் மாறும் உணவின் வடிவில் இயேசு வருகின்றார்
தன்னை ஏற்கும் உள்ளம் தனிலே இணைந்து வாழ்கின்றார்
அப்பத்தின் வடிவில் கடவுள் நம்மோடு வாழ்கின்றார் -2
சரணம் 3:
உன்னத பலியில் ஒவ்வொரு நாளும் இயேசு வருகின்றார்
நம்மைப் பகிர்ந்து அவரில் வாழ இறைவன் அழைக்கின்றார்
அப்பத்தின் வடிவில் கடவுள் நம்மோடு வாழ்கின்றார்-2