appa ungka samookaththai nan

அப்பா உங்க சமூகத்தை நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பா உங்க சமூகத்தை நான்
நாடி வருகிறேன்
அப்பா உங்க மகிமையை நான்
பாடி துதிக்கிறேன் –2
வாரும் ஐயா வல்லவரே
ஊற்றும் ஐயா உன்னதரே—2
1. ஆண்டாண்டு காலமாய் வாழ்பவரல்லோ
அகிலத்தையும் சிருஷ்டித்த தேவன் நீரல்லோ–2 (வாரும் ஐயா)
2. ஆதியிலே தேவன் நீர் வார்த்தையானவர்
எனக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவர் –2 (வாரும் ஐயா)
3. சீக்கிரமாய் வந்திடுவேன் என்று சொன்னவரே
சீயோனில் வாசம் செய்யும் இயேசு ராஜனே–2 (வாரும் ஐயா)