Appa Um Anbai

அப்பா உன் அன்பை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Appa Um Anbai – அப்பா உன் அன்பை
அப்பா உன் அன்பை
நான் நினைக்கையிலே
என் உள்ளம் உருகி
உம்மை உயர்த்தி பாடும் -2
கடலின் ஆழம்
மிஞ்சும் அன்பு
காற்றின் எல்லை
தாண்டும் அன்பு -2
உம் அன்பின் எல்லை
வானம் இல்லை
உம் அன்பின் ஆழம்
எல்லை இல்லை -2
ஜீவனை விடவும்
பெரிது உம் கிருபை
உன் கிருபை நதியாய்
பாய்ந்து ஓட -2
அந்த நதியின் துளியே
போதும் நான் வாழ
நீர் பொழியும் கிருபை
போதும் நான் வாழ -2
கல்வாரி அன்பை
நான் நினைக்கும் போது
அப்பா உம் தியாகம்
நான் உணரும்போது -2
என் கண்கள் மட்டும்
குளமாய் மாற
வாய்கள் பேச
வார்த்தை இல்லை
என் கண்கள் மட்டும்
குளமாய் மாற
உம் அன்பை விளக்க
வார்த்தை இல்லை