Appa Appa Yesu Appa

அப்பா அப்பா இயேசு அப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பா அப்பா இயேசு அப்பா
உம்மை என்ன சொல்லி பாடுவேனப்பா-(2)
நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம் -2
அதை சொல்லி சொல்லியே நான் பாடுவேனப்பா-2
அப்பா அப்பா
1.கோடி கோடியாய் சாட்சிகள் இருக்குதே
அதை சொல்வதற்கு நேரம் போதாதே-(2)
கிடைக்கும் நேரத்தில் உம்மை மகிமைப் படுத்துவேன்-(2)எனக்கு
உந்தன் செயல்களையே சொல்லி துதிப்பேன்-(2) தினம்
அப்பா அப்பா
2.சுயமாக வெற்றிபெற அலைந்து திரிந்தேனே
தோல்வியை தவிர எனக்கு ஒண்ணும் கிடைக்கலே-(2)
ஆவியோடும் உண்மையோடும் உம் பாதம் அமர்ந்தேன்-(2)நான்
வெற்றிமேலே வெற்றிகளை தந்து மகிழ்கின்றீர்-(2)எனக்கு
அப்பா அப்பா
3.நெருக்கத்திலெல்லாம் நான் உம்மை நம்பினேன்
அதனால் என் தேவைகளை நீர் சந்தித்தீரே-(2)
வறுமையிலும் பானையிலே மாவு குறையலே-(2)என்
கலசத்திலும் எண்ணெய் குறைஞ்சு போகலே-(2) என்
அப்பா அப்பா
4.ஊழியப் பாதையில் என் மனம் சோர்ந்ததே
வாக்குத்தத்தம் தந்து என்னை தூக்கி நிறுத்தினீர்-(2)
மேய்பனுக்கான தகுதி எனக்கு இல்லையப்பா-(2)ஒரு
நீர் தானே உருவாக்கி பயன்படுதீதுகிறீர்-(2)என்னை
அப்பா அப்பா