anugraha kaalam idhuvae

அனுக்கிரக காலம் இதுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அனுக்கிரக காலம் இதுவே
அடைந்திடுவேன் என் இயேசுவை
கிருபையின் காலம் இதுவே
பின்பற்றுவேன் என் இயேசுவை
அல்லேலுயா
1. குற்றுயிராய் கிடக்கும் மனிதனை
பார்த்து ஒதுங்கி போகமாட்டேன்
நல்ல சமாரியன் இயேசு போல்
உதவி செய்ய ஓடுவேன் (லூக்கா 10:30-36)
2. ஆபத்தின் நாளில் அலராமல்
மனிதனை தேடி போகாமல்
அடைக்கல பட்டணம் இயேசுவாம்
அவரிடம் வந்து சேருவேன் (எண் 35:6-34)
3. விசுவாச பாதையில் ஜெயமாக
ஓட வல்லமை வேண்டுமே
பாதம் கல்லில் இடறாமல் (சங் 91:12)
கரங்களில் தாங்குவார் இயேசுவே
4. உலகத்திலிருப்பவனை விட
எனக்குள் இருப்பவர் பெரியவர் (1யோ 4:4)
எனக்காக யுத்தம் செய்திடும்
இயேசுவின் வெற்றிக் கொடி ஏற்றுவேன்
5. இயேசுவை நோக்கும் போதெல்லாம்
எனக்காக இறங்கி வந்திடுவார்
வெட்கப்படவே விடமாட்டார் (ரோ 10:11)
தோல்வி என்பதில்லையே
6. அற்புதத்தின் மேலே அற்புதம்
செய்யும் இயேசுவை நினைத்தாலே
உள்ளமெல்லாம் மகிழுது
நன்றியால் இருதயம் பொங்குது
7. இயேசுவை முழுமையாய் பின்பற்ற
என்னை முற்றிலும் படைக்கிறேன்
உயிரையே தந்த அவருக்கு
வாழ்வை முழுவதும் கொடுக்கிறேன்
8. இவ்வுலகப் பாடுகள் சமமல்ல
வரப்போகும் மகிமைக்கு ஒப்பிட (ரோ 8:18)
உண்மை உத்தம சாட்சியாய்
இயேசுவின் வருகையை நோக்குவேன்