antha alakaiyin aatsithanai inru ozhiththe uyirththezhunthar

அந்த அலகையின் ஆட்சிதனை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

அந்த அலகையின் ஆட்சிதனை இன்று ஒழித்தே உயிர்த்தெழுந்தார்
இந்த உலகம் இருக்கும் வரை எந்த நாளும் உடன் இருப்பார்
உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார்
என்னில் வாழ்ந்தால் இறப்பே இல்லை என்றெனைத்தேற்றியவர்
கல்லறை உடைத்து சாவினை ஜெயித்து வல்லமை யோடெழுந்தார்
உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார்
நானே வழியும் ஒளியும் வாழ்வும் என்றே சொல்லியவர்
விண்ணொளி சூழ வீரர்கள் ஓட கல்லறை விட்டெழுந்தார்
உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார்
அந்த அலகையின் ஆட்சிதனை பாடல் வரிகள், Antha Alagaiyin Aatchithanai Lyrics