anpootu vanthoom kanikkai thanthoom

அன்போடு வந்தோம் காணிக்கை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே
உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே
பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் -2
புதிரான வாழ்வே எதிரானதாலே -2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே
உம் அருளோடு அணைப்பாய் மாபரனே
அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம்
திரியாகக் கருகி மெழுகாக உருகி -2
பலியாக வைத்தோம் ஆண்டவனே
புது ஒளியாக மாற்றும் தூயவனே
அன்போடு வந்தோம் காணிக்கை பாடல் வரிகள், Anbodu Vandhom Kaanikkai Lyrics