anpinil pirantha iraikulam – Anbinil Pirantha Iraikulam

அன்பினில் பிறந்த இறைகுலம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அன்பினில் பிறந்த இறைகுலம் – Anbinil Pirantha Iraikulam
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
அறம் வளர்ப்போமே !
ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் — (2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம்
பரிவுள்ள இறைவன் திருவுளம் ஏற்போம் — (அன்பினில்)
பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை — (2)
பிறந்த நம் வாழ்வின் பயன் பெற வேண்டும்
பிறனையும் நம்மைப் போல் நினைத்திடவேண்டும் — (அன்பினில்)