anpin siluvaiye

சிலுவையை கண்டு கலங்கினேன்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

அன்பின் சிலுவையே
கல்வாரியை நோக்கி ஒரு பயணம்
A journey to the Calvary
சிலுவையை கண்டு கலங்கினேன்
சில நொடிகளில் வியந்தேனே
உம் தியாகம் பார்த்து
அன்பை பார்த்து
கரைந்து நான் போனேனே
உள்ளம் உருகி நான் போனேனே
கல்வாரியில் அன்பை விதைத்தவர்
நம் பாவங்கள் அங்கு சுமந்தவர்
குருதி நதியாய் ஓடியதே
அதில் மூழ்கிய உயிர்கள் மாறியதே
இந்த விந்தை கண்டேனே
உம் பின்னே நான் தொடர்ந்தேனே… (சிலுவையை கண்டு)
கரங்கால்களில் ஆணீ அடித்தனர்
உம் முகத்திலே காரி உமிழ்ந்தனர்
உம் பொறுமை கண்டு வியந்தனே
உம் சிறுமை கண்டு அழுதனே
இந்த விந்தை கண்டேனே
உம் பின்னே நான் தொடர்ந்தேனே… (சிலுவையை கண்டு)
சிலுவையை கண்டு கலங்கினேன் பாடல் வரிகள், Siluvaiyai Kandu Kalanginean lyrics