anpin roopamay sinna palanay

அன்பின் ரூபமாய் சின்ன பாலனாய்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

அன்பின் ரூபமாய் சின்ன பாலனாய்
மண்ணில் தோன்றினார் மகிழ்ந்து பாடுவோம்
அன்பின் ரூபமாய் இயேசு பாலனே
மண்ணில் தோன்றினார் மகிழ்ந்து பாடுவோம்
கிறிஸ்மஸ் வாழ்த்து(க்)கள் ஆஹஹா
எங்கும் கூறுவோம் – ஓஓ…ஹோ
மீட்பின் மேன்மையைாய் செய்தி சொல்லுவோம்
இயேசு பாலனை வாழ்த்துவோம்
தேவ தேவனை வாழ்த்துவோம் -அன்பின்
1. விண்ணில் ஜோதி தோன்றிற்றே
மண்ணில் பாவம் போக்கவே -ஆஆ ஆஆ.. | 2
மாந்தர் சாபம் நீக்கவே மன்னவர் பிறந்திட்டார்
எங்கெங்கும் மகிழ்ச்சி மாந்தர் மேல் பிரியம்
பூலோகத்தில் உண்டானதே ஆஆ- அன்பின்
2. கன்னி மரி பாலனாய்
திவ்ய நாதர் தோன்றினார் ஆ ஆ-2
மீட்பின் கீதம் முழங்கவே இரட்சகர் பிறந்திட்டார்
வாக்கு மாறாதவர் வார்த்தையில் வல்லவர்
இம்மானுவேல் ஜெனித்திட்டாரே . அன்பின்