anpile pooranare - engkal aanantha roopa athisaya rajaazhakil siranthoone - engkal aasaiyin koomaneaha aha aanantham aha aha aanantham anniyaram -azhaiththanaiththeeresaranangkal1. kaththeere karunaiyutan - em kalakkangkal neekki kanivutan thookkikathiyilla ezhaikalin perum kavalaikalaip pookkiaha aha aanantham aha aha aananthamaaruthal aliththeer anuthinam thuthippen - anpile2. aanantham aananthame - um aaruyir eentheer avaniyil vantheeralakaithanai venreer - avan atimaikalai meetteeraha aha aanantham aha aha aananthamallelooya pati akamakizhnthituvoom - anpile3. kootaiyil kulir tharuve - katum vataiyin- maraive ezhaiyin urave kootuvoom thiruppatham - thinam patuvoom avar keetham aha aha aanantham aha aha aanantham anpe, anpe, annaiyin melay - anpile 4. niththiya parisuththare - um varukaiyil atiyaraip parisuththam seyyum uththam jeevikalay - nal niththiya vazhvinile aha aha aanantham aha aha aanantham allelooya keetham pati makizhvoom - anpile 5. thooththiram thuthiyumakke - theva anpin aazham arinthu pukazhvoom aayaththamulloorkke - neer arunoothayamaveer aha aha aanantham aha aha aanantham aa! aanantham allelooya pati - anpile

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

அன்பிலே பூரணரே - எங்கள் ஆனந்த ரூபா அதிசய ராஜாஅழகில் சிறந்தோனே - எங்கள் ஆசையின் கோமானேஅஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அன்னியராம் -அழைத்தணைத்தீரேசரணங்கள்1. காத்தீரே கருணையுடன் - எம் கலக்கங்கள் நீக்கி கனிவுடன் தூக்கிகதியில்லா ஏழைகளின் பெரும் கவலைகளைப் போக்கிஅஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம்ஆறுதல் அளித்தீர் அனுதினம் துதிப்பேன் - அன்பிலே2. ஆனந்தம் ஆனந்தமே - உம் ஆருயிர் ஈந்தீர் அவனியில் வந்தீர்அலகைதனை வென்றீர் - அவன் அடிமைகளை மீட்டீர்அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம்அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் - அன்பிலே3. கோடையில் குளிர் தருவே - கடும் வாடையின்- மறைவே ஏழையின் உறவே கூடுவோம் திருப்பாதம் - தினம் பாடுவோம் அவர் கீதம் அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அன்பே, அன்பே, அன்னையின் மேலாய் - அன்பிலே 4. நித்திய பரிசுத்தரே - உம் வருகையில் அடியாரைப் பரிசுத்தம் செய்யும் உத்தம் ஜீவிகளாய் - நல் நித்திய வாழ்வினிலே அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம் - அன்பிலே 5. தோத்திரம் துதியுமக்கே - தேவா அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம் ஆயத்தமுள்ளோர்க்கே - நீர் அருணோதயமாவீர் அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் ஆ! ஆனந்தம் அல்லேலூயா பாடி - அன்பிலே