anparin pathaththil amarnthiruppen ( nan )

அன்பரின் பாதத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பரின் பாதத்தில் அமர்ந்திருப்பேன் ( நான் )
அன்பாய் என்னை அரவணைப்பார்
துன்பங்கள் தீர்ப்பார் துயரங்கள் துடைப்பார்
மகிழ்ச்சியாய் மாற்றிடுவார் -என்னை (2) – அன்பரின்
பெலவீன நேரத்தில் பெலன் தருவார்
ஆபத்து காலத்தில் தாங்கிடுவார் (2)
மரண இருளில் நான் நடந்திட்டாலும்
மன்னராம் இயேசு உடனிருப்பார் (2) – அன்பரின்
பாவியாம் என்னையும் மீட்டெடுத்தார்
பாவங்கள் யாவையும் நீக்கிவிட்டார் (2)
பரலோக வாழ்வில் என்னையும் சேர்க்க
பரமன் இயேசு பலியானார் (2) – அன்பரின்
அதிசயம் என் வாழ்வில் செய்திடுவார்
அற்புதம் காண உதவி செய்வார் (2)
வார்த்தையாம் மன்னாவை அனுதினம் தந்து
வல்லமையாக நடத்திடுவார் (2) – அன்பரின்