Annai Thanthaiyai Pol Lyrics

அன்னை தந்தையைப் போல்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs collection.

அன்னை தந்தையைப் போல் என்னிடம்
அன்பாய் பேசிட யாருமில்லை
மண்ணிலே பிறந்த எவரும்
தன்னையே எண்ணி வாழுகின்றார்
என்னைப் போல் அன்புக்காய் ஏங்கிடும்
ஏழையை நினைக்க யாருண்டு
கண் இமைகள் நான் மூடி விட்டால்
செல்வேன் எங்கென்று தெரியவில்லை
1. அன்னை தந்தைக்கு மேல் உன்னிடம்
கொஞ்சிப் பேசிட இயேசுவுண்டு
மண்ணிலே பிறந்த அவரே
உன்னையே எண்ணி வாழ வந்தார்
அன்பின் தேவன் உன்னை இரட்சிக்க
சிலுவையில் இரத்தம் சிந்தினார்
கண் இமைகள் நீ மூடும் வேளை
கண்மணி உன்னை மோட்சம் சேர்ப்பார்
2. அன்னையும் தந்தையும் இயேசுவே
அண்ணனும் மன்னனும் இயேசுவே
அன்பரும் நண்பரும் இயேசுவே
அனைத்தும் எனக்கு இயேசுவே
எந்தன் இன்பமெல்லாம் இயேசுவே
எந்தன் எண்ணமெல்லாம் இயேசுவே
எந்தன் வாழ்க்கையெல்லாம் இயேசுவே
என் எல்லாம் உமக்கே இயேசுவே