annai nee enakkoru varam

அன்னை நீ எனக்கொரு வரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

அன்னை நீ எனக்கொரு வரம்
ஆரோக்கிய மாதாவே அருள் புரிவாய் -2
தன்னையே தந்தவர்க்கு தாய் அல்லவா
இந்த தரணியை காப்பவள் நீ அல்லவா
1.எல்லை இல்லாத உந்தன் இதயத்தின் அன்பால்
தொல்லை துயர் இல்லா சேர்ந்திட காண்பாய் -2
பிள்ளை இல்லாத பெரும் குறை நீ தீர்ப்பாய் (தீர்த்தாய் )
வல்லளாய் அருள் தன்னை வழங்கியே காத்தாய் (காப்பாய் )-2
2.கல்லும் கசிந்துருக முள் முடி தாங்கியே
கருணை வடிவம் யேசு மகன் அல்லவா -2
பொல் உலகில் பாவ சுமைதனை சிலுவையாய்
தோளில் சுமந்தரவர்க்கு தாய் அல்லவா -2
3.அல்லும் பகலும் அம்மா அம்மா என்றே
கண்ணீர் வடிப்பவர் பல கோடி -2
உள்ளும் புறமும் உமத்தருள் ஒன்றையே
தேடி வந்தோம் உந்தன் புகழ் பாடி -2