anbin kaitrinal katti ezhuthukollumae

அன்பின் கயிறினால் கட்டி இழுத்துக்கொள்ளுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பின் கயிறினால் கட்டி இழுத்துக்கொள்ளுமே – 2
சித்தத்தின் மையத்தில் என்னையும் வைத்து கொள்ளுமே
இந்த உலகம் வேண்டாமே
உந்தன் கையிலே தந்து விட்டேன்
என்னை வனைந்திடும் தெய்வமே
1. மாம்ச் சிந்தை மரணம் என்றுணர்ந்தேன்
ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமாம் – 2
தூய ஆவியால் நிரப்புமே
எந்தன் பாதையின் வெளிச்சமே
எந்தன் ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடியே முடித்திட
கிருபை தாருமே
2. கிறிஸ்துவின் சிந்தையால் என்னையும் நிரப்பிடுமே
உந்தன் மகிமையால் காலோன்றி நிற்க செய்யும்
தேவ ராஜ்ஜியம் பெலத்துடன் என் மேலே இறங்கட்டும்
உந்தன் மகிமையின் சுவிசேஷம் நானும் தீவிரமாய் அறிவிக்க
கிருபை தாருமே
3. கொடிய காலங்கள் பூமியை நெருங்கிடுதே
தேவனின் கோபத்தால் பற்றி எறியப்போகுதே
கோடி அழிந்திடும் ஜனங்களை (ஓ) தீவிரமாய் மீட்டிட
திறப்பிலே நின்று நான் தினம் கதறியே ஜெபித்திட
கிருபை தாருமே