Anbin Alaikalukkul Ennai Amilnthu poga song lyrics

அன்பின் அலைகளுக்குள் என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.

அன்பின் அலைகளுக்குள் என்னை
அமிழ்ந்து போகச் செய்தீர்
எத்தனாம் எந்தனை நித்தமும்
நினைத்த நித்தியரே ஸ்தோத்திரம்
நன்றி ஐயா (3) என் இயேசையா
திரளான பாவங்கள் மன்னித்தீரே
திக்கற்ற என்னை நீர் நினைத்தீரே (2)
தேடி வந்தீரே ஓடி வந்தீரே (2)
அன்பைப் பொழிந்தென்னை அணைத்தீரே
காயங்கள் ஏற்றீரே கொல்கொதாவில்
உம் கண்ணீரை சிந்தினீர் கெத்சமெனில்
பாத்திரம் நீங்கிட பரிதபித்தீர்
பாவியை நினைத்து ஒப்புக் கொடுத்தீர்
என்னத்தை கண்டீரோ என்னிடத்தில்
எனக்காக பாடுகள் ஏன் சகித்தீர்
என்ன செய்வேனோ ஏது செய்வேனோ
என்னைப் படைக்கிறேன் உம் பாதத்தில்