Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics

அன்பர் இயேசுவின் அன்பு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.

அன்பர் இயேசுவின் அன்பு
அது அளவிட முடியாது
கடற்கரை மணலைக் கணக்கிடலாம்
அவர் அன்பிற்கீடேது
சிலுவை நாயகன் சிந்திய இரத்தம் அன்பாய் வழிகிறது – ஆ… ஆ… சிறுமைப்பட்ட ஜனங்களை மீட்க இரத்தம் போகின்றது
பாவம் பெருகின இடத்தில் – தேவ கிருபை வெளிப்பட்டதே ஆ… ஆ…
பாவ மீறுதல் போக்க சிலுவையிலே இரத்த வெள்ளம் பாய்கின்றதே
ஆணிகள் அடித்து தொங்கிய போதும் தனக்காய் அழவில்லை ஆ… ஆ… கள்ளர்கள் நடுவில் கதறிடும் போதும் உனக்காய் அழுகின்றார் – இயேசு