anantha nyaname anathi sinekame makimaiyin mekame en

இயேசு கிறிஸ்துவை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அநந்த ஞானமே அநாதி சிநேகமே மகிமையின் மேகமே என்
மனதின் ராகமே
உம்மையே உயர்த்தி
உம்மையே துதித்து
உம்மையே தொழுகிறேன் (தொழுகிறோம்)
வழிநடத்தும் மேக ஸ்தம்பமே
இரவினில் காக்கும் அக்கினி ஸ்தம்பமே
என்னை போஷிக்கும் ஜீவ அப்பமே
மாறாத வாக்குத்தத்தமே
பரத்தை விட்டு வந்த பலி பீடமே
பரிந்து பேசும் தூப பீடமே
என்னை நேசிக்கும் நித்திய சொந்தமே
அழியாத சுதந்திரமே
அரசாளும் ஆதி அந்தமே
முத்திரைகள் உடைக்கும் யூத சிங்கமே
விடிவெள்ளி நட்சத்திரமே
நித்திய ஆலயமே