amarnthiruppen anpar samookaththile – Amarnthiruppean Anbar Samugagaththilae

அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே – Amarnthiruppean Anbar Samugagaththilae
அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே
அமைதி தரும் அவர் குரலொலிக்க
என் புகழ் மாலை அவர் கற்பனை
என்னைக் காக்கும் அரணுமதே
பெலவீனங்கள் தினம் தொடருகையில்
பாலைவனம் போல் வாழ்க்கை
தோன்றுகையில் வல்லவர் வலக்கரம்
என்னைத் தாங்கும் மெல்ல அணைத்து என்னை வழிநடத்தும்
வானவர் வாக்குகள் அமிர்தமாமே
வானின் மன்னா போலவே ஜீவன் தரும்
பொன்னிலும் அதி விலையேறியது
நன்மை தரும் தினம் வாழ்வில் அது