amaithiyin theyvame iraiva en ithayath thalaivane

அமைதியின்தெய்வமேஇறைவா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே
அருள்வாய் அருள்வாய் யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி
அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி (2)
நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி
தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி (2)
அன்பு மொழியை விதைத்திடுவோர்
அருளின் பயிரை அறுத்திடுவார் (2) -அமைதி
உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி
உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி
ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்
வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் (2) -அமைதி