allelooya allelooya en aaththumave – Alleluya Alleluya En Aathumavae Kartharai

அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே – Alleluya Alleluya En Aathumavae Kartharai
அல்லேலூயா அல்லேலூயா
என் ஆத்துமாவே கர்த்தரை துதி
நான் உயிரோடு இருக்குமட்டும்
என் தேவனைத் துதிப்பேனே
நான் உள்ளளவும் என் இயேசுவையே
கீர்த்தனம் பண்ணிடுவேன்
நான் மனிதனை என்றும் நம்பிடேன்
அவன் யோசனை அழிந்திடுமே
யாக்கோபின் தேவன் என் துணையே
என்றென்றும் பாக்கியவான்
என் ஆத்தும தாகம் பெருக
என் கட்டுகள் அறுந்திடுமே
கர்த்தரின் கரம் என்னைக் காத்திடுமே
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
கர்த்தர் சதா காலமும்
அவர் சீயோனில் அரசாளுவார்
தலைமுறை தலைமுறையாய் அவரே
இராஜரீகம் பண்ணிடுவார்