1. alavilla aazhipoola

அளவில்லா ஆழிபோல
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1. அளவில்லா ஆழிபோல
உலகெல்லாம் பொங்குதாம்
அது இயேசுவின் நேசமாம்!
அங்கலாய்க்கும் பாவியை
அருளதாம்
ஆக்குமாம் நல்லோனாக
2. ஆகாயத்தில் பிரகாசிக்கும்
அளவில்லா ஜோதிபோல்
இயேசு நாதர் வாக்குத்தத்தம்
இலங்கி ஜொலிக்குது;
எப்பாவிக்கும்
நம்பினால் மீட்பு உண்டு
3. சுத்தாகாயம் விலையின்றி
நித்தம் நாம் முகரும்போல்
அத்தனேசு அரும் பாடால்
அளித்த இரட்சண்யத்தை
அடைவோமே
அசுத்தம் அகலுமே!
4. பாவக் கறையிலிருந்து
தேவ கிருபை மீட்டிடும்
சாகுமட்டும் அவர் பெலன்
சுத்தமாயென்றும் காக்கும்;
போற்றிடுவோம்
புண்ய நாதன் இயேசுவை