akilam aantavarai arinthu – Agilam Aandavarai Arinthu

அகிலம் ஆண்டவரை அறிந்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அகிலம் ஆண்டவரை அறிந்து – Agilam Aandavarai Arinthu
அகிலம் ஆண்டவரை அறிந்து கொள்ள வேண்டும்,
அதற்கு நானும் ஒரு காரணம் ஆக வேண்டும்.
எந்தன் வாழ்க்கையிலே என்னைக் காண்கையிலே
ஏசுவின் குணங்களே வெளிப்படவேண்டும்.
1.மனங்கள் மாறாமல் குணங்கள் மாறாது
குணங்கள் மாறாமல் மகிமை வாராது.
மகிமை வாராமல் சாட்சிகள் கிடையாது,
சாட்சிகள் வாராமல் ஊழியம் முடியாது.
உலகம் காண்பதற்கு காத்திருக்குதே,
உன்னதர் கண்களும் பூத்திருக்குதே.
2. ஆண்டவர் சிலுவையை அடியேன் சுமக்கணும்,
அநுதினம் உலகிலே அதனால் இறக்கணும்.
குறுகிய எண்ணங்கள் அருகியே போகணும்,
கிறிஸ்துவின் குணங்களோ பெருகியே ஆகணும்.
சிருஷ்டிகர் வருவதற்கு காத்திருக்கிறார்,
சாட்சிகள் வருவதை எதிர்பார்த்திருக்கிறார்.
3. எண் என்று எண்ணுபவர் எண்ணாமல் வாழுகின்றார்,
அடையாளம் என்பவரோ அசட்டையாய் தாழுகின்றார்,
எண்ணாக இருந்தாலும், அடையாளம் என்றாலும்,
ஏசுவின் குணங்கள் மட்டும் எவருக்கும் தேவையன்றோ,
சபையே வெதுவெதுப்பாய் மாறிப்போச்சுதே,
சாட்சிகள் தோன்றுவது தாமதம் ஆச்சுதே.
அகிலம் ஆண்டவரை அறிந்து கொள்ள வேண்டும்,
அதற்கு நீயும் ஒரு காரணம் ஆக வேண்டும்.
உந்தன் வாழ்க்கையிலே உன்னைக் காண்கையிலே
ஏசுவின் குணங்களே வெளிப்படவேண்டும்.