Aiya En Naatha Ennai kan paaraai

ஐயா என் நாதா என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Aiya En Naatha Ennai kan paaraai – ஐயா என் நாதா என்னை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஐயா என் நாதா என்னை கண் பாராய்
பாவ உல்லாசத்தில் பலியான பாவி -2
சுவையான பாவம் சுமையாக வந்து
என்னுயிரை வாங்குதய்யா
ஏசையா எனக்கு இப்போ இறங்குமய்யா
போகாத இடமில்லை செய்யாத தவறில்லை
ஊரார்கள் மத்தியில் நிற்காத நாளில்லை-2
தவிக்கின்றேன் ஐயா அமைதி இல்லை
தாவீதின் குமாரா தரிசனம் தாராய்-2
பொருள் எல்லாம் அழித்தேன் உறவெல்லாம் இழந்தேன்
தனி மரமாக உலகில் ஆனேன்-2
துடிக்கின்றேன் ஐயா துயரம் நீங்காதா
கல்வாரி நாதா கருணை செய்தேவா-2
பயம் என்னை ஒடுக்க
பசி தாகம் வாட்ட
துக்கத்தால் என் தேகம் பனி போல் உறைய-2
மகன் என்று சொல்ல முடியாத பாவி
பணியாள என்னை ஏற்றுக் கொள்வீரா-2
மன்னித்தீர் தேவா
மறுவாழ்வு தந்தீர்
மனதார உம்மை இதயத்தில் கொண்டேன்-2
மறுபடி உம்மை பிரியாமல் வாழ
வரம் தாரும் அய்யா வல்லமை தேவா-2