aingkayangkal atainthe thongkinar – Aikaatangal Adainthae Thonginaar

ஐங்காயங்கள் அடைந்தே தொங்கினார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Roman Catholic Songs collection.

ஐங்காயங்கள் அடைந்தே தொங்கினார் – Aikaatangal Adainthae Thonginaar
ஐங்காயங்கள் அடைந்தே தொங்கினார் [புனித வெள்ளி பாடல்]
ஐங்காயங்கள் அடைந்தே தொங்கினார்
ஐந்து நதியாய் இரத்த வெள்ளம் ஓடுவதை பாராயோ !
ஐயா இயேசையா பாவ நிவாரண பலி ஆனீரே!
1.கெத்சேமனையிலே தம் வேர்வை இரத்தமாகி
கண்ணீருடன் கதறி ஜெபித்தார்
கர்த்தர் அன்றுஇராவிலே
ஐயா இயேசையா பாவ நிவாரண பலி ஆனீரே!
2.பாவ வினைதீரா நீ தேவனிடம் சேராய்
பாவியை இரட்சிக்க இயேசு வல்லால்
பாரினில் வேறாரில்லை
ஐயா இயேசையா பாவ நிவாரண பலி ஆனீரே?
3.மாந்தா இதை நம்பு வேறெந்த வழி உண்டு
மாளும் மனிதனின் இரட்சண்யமே
மாறா கிறிஸ்தேசுவே
ஐயா இயேசையா பாவ நிவாரண பலி ஆனீ
4.பாவ வாழ்வின் துன்பம்,பிரயாசம் யாவும் வீணே
பாவ சந்தோஷமும், சிற்றின்பமும் பாதாளம் சேர்த்திடுதே
ஐயா இயேசையா பாவ நிவாரண பலி ஆனீரே
5.கொல்லும் மாய இன்பம் உன் வாழ்வும் கசப்பாகும்
கல்லாகி கடின மனதுடன் கர்த்தரை ஏன் தள்ளினாய்?
ஐயா இயேசையா பாவ நிவாரண பலி ஆனீரே?
6.என்ன கொண்டு வந்தாய்?நீ என்ன கொண்டு போவாய்?
உன் ஆவி பிரிந்தால் எங்கு செல்வாய்
என்றேசு கேட்கின்றாரே ?
ஐயா இயேசையா பாவ நிவாரண பலி ஆனீரே!