தூயாதி தூயவரே உமது புகழை – Thooyathi Thooyavarae Umathu

தூயாதி தூயவரே உமது புகழை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்
அனுபல்லவி
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் – தூயாதி
சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – பாரில்
மக்களின் (பாரோரின் ) நோய்களை நீக்கினவர்
பாவியென் பாவநோய் நீக்கிடுமே – பாரில்
துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிடப் பெலன் தாருமே – பாரில்
தன் ஜீவன் எனக்காகத் தந்தவரே
என்னுள்ளம் பலியாக ஏற்றிடுமே! – பாரில்
பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்கும் ஓரிடம் தாருமே
(பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே ) – பாரில்