Abisheha Naathanukku Anantha sorubanukku song lyrics

அபிஷேக நாதனுக்கு அனந்த
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அபிஷேக நாதனுக்கு அனந்த சொரூபனுக்கு -2.
சரணம்… சரணம்… சரணம்… -2
இன்ப நல் தேவனுக்கு இனிய நல்நாதனுக்கு
துன்பம் போக்குவோனுக்கு துயரம் நீக்குவோனுக்கு
ராஜாதி ராஜனுக்கு தேவாதி தேவனுக்கு
கர்த்தாதி கர்த்தனுக்கு கருணை மணாளனுக்கு
நித்திய தேவனுக்கு உத்தம நல் ராஜனுக்கு
சத்திய போதனுக்கு சரித்திரம் தந்தோனுக்கு’
பரலோக தேவனுக்கு பரம நல் ராஜனுக்கு
பாசம் காட்டியே நம்மை நேசிக்கும் தேவனுக்கு
உன்னத தேவனுக்கு உயர்ந்த நல் ராஜனுக்கு
மண்ணிலே வாழ வைக்கும் மகிமை மணாளனுக்கு