aaviyil nirainthu jivikka

ஆவியில் நிறைந்து ஜீவிக்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆவியில் நிறைந்து ஜீவிக்க
அபிஷேகம் ஊற்றிடுங்கப்பா
ஆவியின் வரங்களால் நிரம்பிட
உம் அருள் மாரி ஊற்றிடுங்கப்பா
ஆராதனை ஆராதனை
ஆவியானவரே – 2
சிறைப்பட்ட ஜனங்களை மீட்க
உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா
காயப்பட்ட ஜனங்களைத் தேற்ற
உம் அன்பின் வெள்ளம் ஊற்றுங்கப்பா
வாலிபர்கள் முதியோர்கள் மேலும்
உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா
தரிசனம் சொப்பனங்கள் காணட்டும்
உம் பின்மாரி ஊற்றுங்கப்பா
ஊழியர்கள் உலகெங்கும் பெருக
உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா
உலகெங்கும் திருச்சபை பெருக
உம் பின்மாரி ஊற்றுங்கப்பா