aaviyana thevane asaivatume

ஆவியான தேவனே அசைவாடுமே
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆவியான தேவனே அசைவாடுமே
அருள்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே -2
வாரும் ஆவியே தூய ஆவியே -4
தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே – உம்
திருக்கரத்தின் வல்லமையைப் பொழிந்திடுமய்யா -2
ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே – என்
சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா -2
தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே – என்
துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா -2
ஆவியான தேவனே அசைவாடுமே பாடல் வரிகள், Aaviyana Devanae Asaivaadumae Lyrics