aaviyai thara vendum iraiva

ஆவியைத் தரவேண்டும் இறைவா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆவியைத் தரவேண்டும் இறைவா – Aaviyai tharav vendum iraiva
ஆவியைத் தரவேண்டும் இறைவா – 2
தூய ஆவியைத் தரவேண்டும் தயவாய் – எம்மை
ஆட்கொள்ள வரவேண்டும் விரைவாய்
கோயிலாய் நெஞ்சத்தைக் கொண்டிட வேண்டும்
கோபுரம் போல் ஞானம் ஓங்கிட வேண்டும் – 2
மூவகைப் பகையினை வென்றிட வேண்டும்
மூச்சிலும் பேச்சிலும் நின்றிட வேண்டும்
சான்று பகர்ந்திட ஆர்வமும் வேண்டும்
சத்தியம் காத்திட வீரமும் வேண்டும் – 2
நோன்புகள் ஏற்றிட ஆவலும் வேண்டும்
நோய்நொடி தீர்த்திட ஆற்றலும் வேண்டும்
ஆறுதல் ஆறாகப் பாய்ந்திட வேண்டும்
ஆனந்த வெள்ளத்தில் தோய்ந்திட வேண்டும் – 2
மாறுதல் இல்லாத நன்மனம் வேண்டும்
மாசற்ற வாழ்வினில் நிலைத்திட வேண்டும்