aatri thetrum en yesu rajan

ஆற்றி தேற்றும் என் இயேசு ராஜன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆற்றி தேற்றும் என் இயேசு ராஜன்
ஆறுதல் படுத்திடுவார்
அனல் மூட்டும் தேவனே
அபிஷேகத்தால் அனல் மூட்டும்
1. பாதை அறியாமல் நடந்து வந்தேன்
பார்க்கும் இடமெல்லாம் இருளை கண்டேன்
மின்னலை போல ஒளி வெள்ளம் – 2
என்னில் எழும்பி மிளிர கண்டேன்
2.ஒலிவ மரமாய் ஓங்கி வளர
உன்னத அழைப்பதை உணர்த்தினாரே
சூரிய சந்திர நட்சத்திரமாய்
ஒளி கொடுக்க என்னை அழைத்தாரே
3. மகிமை வாழ்வும் நெறுக்கிடுமே
மாசற்ற அன்பால் அணைத்திடுவார்
நித்திய வாழ்வை அனுபவிப்பார்
நித்தமும் என்னை சேர்த்திடுவார்