Aathumave Nee Thuthithiduvay

ஆத்துமாவே நீ துதித்திடுவாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
நம் தேவனை என்றுமாய்
பாவங்களை மன்னித்தாரே
நம் நோய்களை நீக்கினாரே
1.விண்ணில் உன்னை சேர்த்திடவே
மண்ணில் உதித்தார்
கண்ணீர் யாவும் போக்கிடவே
செந்நீர் வடித்தார் – அல்லேலூயா (2)
பாலைவனமாம் பாரினில் உன்னை
சோலைவனம் ஆக்கினாரே
2. தாகமான நேரம் ஜீவ தண்ணீர் கொடுத்தார்
சோகமான நேரம் அவர் தோளில் சுமந்தார் – அல்லேலூயா (2) பெலவீன நேரம் வைத்தியரானார்
என் வாழ்வில் அவர் போதுமே
3. நித்தியத்தின் பாதையிலே நித்தம் நடத்தும்
நீதிபரர் இயேசுவையே நித்தம் துதிப்பாய் – அல்லேலூயா (2) வழுவாமலே காத்திடுவார்
வாழ்நாள் எல்லாம் துதிப்பேன்