aathumaakalukkaai selavu pannavum

ஆத்துமாக்களுக்காய் செலவு பண்ணவும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆத்துமாக்களுக்காய் செலவு பண்ணவும்
செலவு பண்ணப்படவும்
உன்னை தியாகம் செய்வாயா
1. ஆதாரமின்றி அழிந்து போகும்
ஆத்தும மீட்பிழந்தவர்க்காய்
ஆத்தும பாரம் கொண்டவனாய்
ஆதாயம் செய்வாயா ?
2. எண்ணற்ற மாணவர் நிலையிழந்து
கண்ணற்ற நிலையிலுள்ளார்
எண்ணற்ற ஆசிகள் பெற்று நீயும்
எண்ணியே பார்ப்பாய ?
3. கோதுமை மணி நிலம் விழுந்து
செத்தால் அதிக பலம் தருமே
பிறரது பாரத்தை உன் பாரமாய்
ஏற்றிட துணிவாயா ?
4. சாமுவேல் மோசே நெகேமியா
போன்ற தீர்க்கரை அறிவாயா ?
திறப்பின் வாசலில் நிற்க
உள்ளம் திறந்து கொடுப்பாயா ?