aathma nesarodu anbin

ஆத்ம நேசரோடு அன்பின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. ஆத்ம நேசரோடு அன்பின் ஆழம் சென்று
ஆவலோடே நான் கெஞ்சி கேட்ட போது
அபிஷேக நதி என்னில் பாய்ந்து வந்தது
ஆனந்தத்தினால் என்னை அபிஷேகித்தார்
அன்பே நிரப்பும் உயிரே நிரப்பும்
பெலனே நிரப்பும் இனிதே நிரப்பும்
2. ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று
மெய்மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது
மகிமையின் ஒளியை என்மேல் வீச செய்தார்
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் துள்ளுதே
3. ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
இக்காலத்துப்பாடுகள் ஒய்ந்தொழிந்து போகும்
மகிமை மகத்துவம் என்னை மூடிக் கொள்ளும்
மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய்
4. தேவ ஜனத்தோடு நித்திய நித்தியமாக
ஆராதிப்பேன் என் நேசர் இயேசுவை
தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
கண்ணீர் இல்லையே இனி கவலை இல்லையே
5. ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
அக்கினியினால் என்னை நிறைத்திட்டீரே
இன்னும் வேண்டும் என்று கெஞ்சுதே என் ஆவி
நிரப்பும் நிரப்பும் நிரப்பும் என்று உள்ளம் ஏங்குதே