Aasariya Koottam Naanunga

ஆசாரிய கூட்டம் நானுங்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆசாரிய கூட்டம் நானுங்க
லேவியர் கூட்டம் நானுங்க
பரிசுத்த ஜாதி நானுங்க
இயேசப்பாவின் சீடன் நானுங்க
இயேசுவின் போர் வீரராய்
தேசத்தை சுதந்தரிப்போமே
எத்தனை இடறல் வந்தாலும்
தாண்டிச் செல்லும் போர் வீரன் நான்
சகோதரர் வாசம் செய்வது
எத்தனை இன்பமுங்க
தூதரோடு ஆர்ப்பரிப்போம்
தேவனை ஸ்தோத்தரிப்போமே
வெள்ளையங்கி தரித்த இவர்கள்
இரத்தத்தாலே கழுவப்பட்டவர்கள் (இயேசுவின்)
மரணம் கூட இங்கு இல்லையே
அழுகையும் அலறல் இல்லையே