aasai iyesu mesiyavay

ஆசை இயேசு மேசியாவாய்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆசை இயேசு மேசியாவாய்
ஆகாயத்தில் வாராரே
அல்லேலூயா பாடுவோம் ஆமென்
இயேசுவே வாரும் என்போம் ஆமென்
இயேசுவே வாரும் என்போம்
1.திரளான ஜனங்கள் இடும்
அல்லேலூயா ஆரவாரம்
துதியின் தொனிக் கேட்குதே ஆ ஆ ஆ
அதிபனின் ஒளி வீசுதே – வானில்
அதிபனின் ஒளி வீசுதே
2.மத்திய வானத்திலே
மணவாளன் இயேசுவுடன்
மங்களம் கொண்டாடுவோம் ஆ ஆ ஆ
மகிபனுடன் வாழுவோம் ஆ ஆ ஆ
மகிபனுடன் வாழுவோம்
3.இரட்சிப்பின் நிச்சயமாய்
முத்திரை ஆவி பெற்று
சித்தபடி செய்து நாம் ஆ ஆ ஆ
நித்தியரை சேருவோம் ஆ ஆ ஆ
நித்தியரை சேருவோம்
ஆசை இயேசு மேசியாவாய் பாடல் வரிகள், Aasai Yesu Mesiyavaai Lyrics