aarparithu naam agamagizhndhu kai

ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து கை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து
கைதட்டி பாடுவோம்
கெம்பீர நாதம் இசை முழங்க
இயேசுவை வாழ்த்துவோம்
விண்ணைவிட்டு மண் தோன்றின
மன்னனை ஸ்தோத்திரிப்போம்
உன்னத மா மைந்தனை
சர்வ வல்ல ஆண்டவரை
1. தேவன் நமக்கு துணையுமானார் தீங்குக்கு அஞ்சிடோம்
பூமியின் நிலை குலையும் உறுதியாய் பாடுவோம்
கடலின் கொந்தளிப்பும் இயற்கையின் சிற்றமும்
தேவன் வாசம் செய்யும் அந்நகரமதில் பாதுகாவல் நமக்கு உண்டு
2. சேனைகளின் தேவன் நம்மை செட்டையால் மூடுவார்
சேதமின்றிக் காத்து நம்மை க்ஷேமமாய் போஷிப்பார்-பகலில் மேகஸ்தம்பம் இரவில் அக்னி தூணாய்
சிம்மாசனத்தின் மேலே வீற்றிருக்கும் நம் தேவன் நம்மை அறிவார்