AARATHIPEN

ஆராதிப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தேவைகளை காட்டிலும், என் தேவன் பெரியவரே
என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே-2
ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம் -2
1.தண்ணீரை ரசமாக மாற்றி, என் வெறுமையை நிறைவாக்கினீரே
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும், என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே-2
2. எதிரான சூழ்ச்சியை உடைத்தே, என் எதிரியை மேற்கொண்டீரே
நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம், என் தலை உயர்த்தி வைத்தீரே-2
3.கோணலை நேராக மாற்றி, பள்ளத்தை மேடாக்கினீரே
திறக்காத கதவுகள் எல்லாம், உம் கிருபையால் திறந்திட்டதே -2
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});