aarathanaikku paathirarae

ஆராதனைக்குப் பாத்திரரே உம்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனைக்குப் பாத்திரரே உம்மை
நாங்கள் ஆராதிக்கின்றோம் ஐயா
காற்றையும் கடலையும்
சிருஷ்டித்த நாதரே
ஆவியோடு ஆராதிப்பேன் இயேசுவே
உம்மை நித்தமும் துதித்திடுவேன்
பாவத்தால் நிறைந்த எந்தன் வாழ்வினை
உந்தன் பாசத்தால் மீட்டெடுத்தீர்
பரிசுத்த இரத்தம் சிந்தி
பாவத்தின் கறைபோக்கி
இரட்சித்ததால் உம்மை நான்
எந்நாளும் ஆவியோடு ஆராதிப்பேன்
வாக்குத்தத்தம் போல் உந்தன் சந்நிதியில்
உம் மக்கள் கூடும்போது
நடுவினில் வந்திடுவேன்
அநுக்கிரகம் தந்திடுவேன்
என்றவர் நீர் மாத்திரமே உம்மை நாங்கள்
ஆவியோடு ஆராதிப்போம்
செங்கடல் கடந்த மிரியாம்
தம்புரோடு பாடித்துதித்தது போல்
பாவத்தின் சங்கிலியை உடைத்து எறிந்ததால்
நான் உம்மை ஆராதிப்பேன் ஆவியோடும்
உண்மையோடும் துதிப்பேன்
ஆதித் திருச்சபையார் உம் தாசர்கள்
மேல்வீட்டில் காத்திருந்தார்
அன்று உம் ஆவியை
ஊற்றியது போல் இன்றும்
வல்லமை தந்திடுமே உம்மை
இன்று ஆவியோடு ஆராதிப்பேன்