Aarathanai Naayagarae ummai song lyrics

ஆராதனை நாயகரே உம்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை நாயகரே
உம்மை நான் ஆராதிப்பேன்
அபிஷேகத்தைத் தருபவரே
உம்மை நான் ஆராதிப்பேன்-2
அல்லேலூயா(3) ஆமென்-2
அன்பரும் நீரே ஆதாரம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
இன்பமும் நீரே ஈடில்லா நேசரே
உம்மை நான் ஆராதிப்பேன் – 2
2.உண்மையும் நீரே ஊக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன் -2
3.ஐங்காயம் ஏற்றவரே ஒப்பில்லா நேசரே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஓங்கிய புயத்தவரே ஒளஷதம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன் -2
4.ஆதியும் நீரே அந்தமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
இன்பமும் நீரே ஈடில்லா நேசரே
உம்மை நான் ஆராதிப்பேன்-2
5.வழியும் நீரே வார்த்தையும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
சத்தியம் நீரே ஜீவனும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்-2